/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
ADDED : நவ 10, 2025 01:25 AM
விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாமிற்காக எச்.எம்.ஐ. எஸ்., தமிழ்நாடு என்ற செயலி உருவாக்கப்பட்டு ஒவ்வொரு முகாமிலும் நோயாளிகள் சுயமாக பதிவு செய்து பரிசோதனை, முடிவுகள், சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ள செயல்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.
ஒவ்வொரு சனிக் கிழமை தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் தாலுகா வாரியாக மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதில் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதால் மக்கள் பலரும் வந்து பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் அலைபேசியில் சுயமாக பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்து தனி எண் பெறுவதற்காக எச்.எம்.ஐ.எஸ்., செயலி (மருத்துவமனை மேலாண்மை) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தனி எண்ணை கொண்டு பரிசோதனை முடிவுகள், சிகிச்சைகள், தேவையான மேல்சிகிச்சைகள் குறித்து பல்வேறு தகவல்களை நோயாளிகள் செயலியின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலி குறித்து முகாமில் நோயாளி களுக்கு வழங்கப்படும் அட்டையில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இதை எவ்வாறு 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அலைபேசி பயன்படுத்தும் பலரும் எச்.எம்.ஐ.எஸ்., செயலியை பதிவிறக்கம் செய்து முகாமில் பங்கேற்று வருகின்றனர்.

