ADDED : ஏப் 03, 2026 06:01 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சர்ச்களில் பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பாதம் கழுவும் நிகழ்வு, நற்கருணை ஆராதனை நடந்தது.
விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் பாதிரியார் அருள்ராயன், இணை பாதிரியார் பிரின்ஸ் தலைமையிலும், விருதுநகர் பாண்டியன் நகர் புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான்பிராங்க்ளின், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வும், நற்கருணை ஆராதனையும் நடந்தது.
நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி, ஆர்.ஆர் நகர் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சிலும், கன்னிசேரிபுதுார் சவேரியார் சர்ச்சிலும் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் தேவராஜ் தலைமையிலும், சாத்துார் திரு இருதய ஆண்டவர் சர்ச்சிலும் பாதிரியார் காந்தி சவரிமுத்து தலைமையிலும், சாத்துார் ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு சர்ச்சிலும் பாதிரியார் வனத்தையன் தலைமையிலும் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வும், நற்கருணை ஆராதனையும் நடந்தது.
இதே போல் சிவகாசி லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக் அம்புரோஸ்ராஜ், மீனம்பட்டி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், வியாகுல அன்னை சர்ச் கிளை பங்கு சர்ச்களில் பாதிரியார் மரிய துரை, வடபட்டி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் ஜான் கென்னடி தலைமையிலும் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வும், நற்கருணை ஆராதனையும் நடந்தது. இன்று மாலை சர்ச்களில் பெரிய சிலுவைப்பாதை, புனித வெள்ளி சிறப்பு நிகழ்வுகள் நடக்கிறது.
