ADDED : மார் 21, 2026 08:00 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் விருட்சம் மகளிர் முதியோர் இல்லத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய மூத்த வாக்காளர்களை கவுரப்படுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா 'என் ஓட்டு, என் குரல்', 'என் ஓட்டு, என் உரிமை' என்ற வாசகங்கள் அடங்கிய சால்வையை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட சமூகநல அலுவலர் திலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தாரணி, மூத்த வாக்காளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
