/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயிலில் சேதமான தெப்பக்குளத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சிவன் கோயிலில் சேதமான தெப்பக்குளத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
சிவன் கோயிலில் சேதமான தெப்பக்குளத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
சிவன் கோயிலில் சேதமான தெப்பக்குளத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 31, 2025 05:55 AM
சாத்துார் : சாத்துார் சிவன் கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளதால் இதனை சீரமைக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிதம்பரேஸ்வரர் கோயில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாத்துார் பகுதி மக்களால் சிவன் கோயில் என அழைக்கப்படும் இக்கோயில் முன்பு பழமையான தெப்பக் குளம் உள்ளது.
சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் கை கால்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் கோயிலுக்குள் செல்வது வழக்கம். மழைக் காலத்தில் நகர் பகுதியில் இருந்து பெருகிவரும் மழை நீர் தெப்பக்குளத்தில் தேங்கும்படி குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கடந்த காலங்களில் தெப்பக்குளம் நிறைந்து வந்தது. இந்த நிலையில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் விரிசல் விழுந்து திடீரென இடிந்து விழுந்தது.
சுற்றுச் சுவர் இடிந்த நிலையில் இரவு நேரத்தில் இந்த பகுதியை சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தெப்பக்குளம் அருகில் உள்ள மக்கள் குப்பை கழிவு களையும் தெப்பக்குளத்திற்குள் வீசி தெப்பக்குளத்தை பாழ்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக சிவ பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்து உள்ளனர்.
தெப்பக்குளத்தை துார் வாருவதோடு சுற்றுச்சுவரை புதியதாக கட்டவும் துாய்மையாக பராமரித்து தண்ணீர் நிரப்ப பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.