/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹீமோ டயாலிசிஸ் பிரிவுக்கு சுத்தமான தண்ணீர் வசதி அமைப்பு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை

ADDED : நவ 26, 2025 02:14 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் ஹீமோ டயாலிசிஸ் பிரிவுக்கு சுத்தமான தண்ணீர் வசதி கிடைப்பதற்காக தனி மோட்டார், குழாய் அமைத்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் செயலிழந்தவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதற்காக ஹீமோ டயாலிசிஸ் மிஷின்கள் 7 உள்ளது.
இதனால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 63 நோயாளிகளுக்கு 628 சுழற்சிகளில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையான பொருட்கள், யூரியா, பெட்டாசியம் உள்பட பல்வேறு அமிலங்களும் சுத்திகரிப்பட்டு மீண்டும் நோயாளி களுக்கு செலுத்தப்படுகிறது.
இதற்காக சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு தேவையான தண்ணீரை கொடுப்பதற்காக தனியாக ஆர்.ஓ., அமைப்பு உள்ளது.
ஆனால் நகராட்சி குடிநீர் குழாயில் வரும் தண்ணீரில் அதிகமான வேதிப்பொருட்கள் இருந்ததால் ஒவ்வொரு முறையும் ஆர்.ஓ., அமைப்பு அளவுக்கு அதிகமான திறனில் வேலை செய்ய வேண்டியிருந்தது. இதை போக்குவதற்காக தற்போது மழைநீர், போர்வெல் தண்ணீரை தனியாக பயன்படுத்துவதற்காக தனி மோட்டார், குழாய் அமைக்கப்பட்டது.
தற்போது தனி குழாய் வழியாக ஹீமோ டயாலிசிஸ் பிரிவுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு ஆர்.ஓ., அமைப்பினால் தற்போது நோயாளி களுக்கு சிரமமின்றி ரத்த சுத்திகரிப்பு செய்ய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.