தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மருத்துவமனை மேலாண்மை திட்டம் அமல்

 மருத்துவமனை மேலாண்மை திட்டம் அமல்

 மருத்துவமனை மேலாண்மை திட்டம் அமல்


ADDED : ஜன 29, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் நேற்று முதல் எச்.எம்.ஐ.எஸ்., 3.0 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு வழங்கப்படும் சுகாதார அட்டையை காண்பித்து மேல்சிகிச்சையை எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட இந்த அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் எச்.எம்.ஐ.எஸ்., 3.0 என்ற மருத்துவமனை மேலாண்மை திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான தனி எண், பெயர், அலைபேசி எண், கியூ.ஆர்., கோடு விபரங்கள் அடங்கிய சுகாதார அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை கொண்டு வெளிநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் அனைத்து விபரங்களும் எச்.எம்.ஐ.எஸ்., 3.0 செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இனி வரும் காலங்களில் நோயாளிகளுக்கான மருந்துகள், பரிசோதனை முடிவுகள் என அனைத்தையும் டாக்டர்கள், பணியாளர்கள் ஆன்லைனில் அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றாலும், மாநிலத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சுகாதார அடையாள அட்டை எண்ணை வைத்து நோயாளிகளின் அனைத்து விபரங்களை பார்த்து எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us