/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
ADDED : நவ 15, 2025 05:11 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு வி.ஐ. பி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 62. கணவர் பன்னீர்செல்வம் இறந்த நிலையில் மகளுடன் வீட்டில் தனியே வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் வேலை செய்து வரும் இவரது மகன் சென்னைக்கு வந்ததால் அவரை காண வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் சென்னைக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை இவரது வீட்டின் கதவு திறந்து இருந்தது.
தெற்கு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் கொள்ளையர்கள் குறித்து விசாரணை செய்கின்றனர்.
மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடி தெரு முக்கு வரை நின்று விட்டது.
ராஜேஸ்வரி வந்த பின் கொள்ளை போன பொருட்கள் குறித்து தெரிய வரும் என தெரிவித்ததுடன் சி.சி.டி.வி கேமரா பதிவு அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

