ADDED : ஜூன் 12, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சுமன். இவர் வீட்டின் சமையலறையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு குளிர்சாதனப் பெட்டியில் தீ பிடித்து கரும்புகை வெளியேறியது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் பாழானாது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.