ADDED : டிச 14, 2025 05:27 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை சட்டத்துறை சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்கள் மனித உரிமை உறுதிமொழி எடுத்தனர். குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு, கல்வி உரிமை, சமத்துவம், வன்முறை தடுப்பு குறித்து மாணவர்கள் தெரு நாடகத்தை நடத்தினர். விழாவில் சட்டத்துறை தலைவர் பாரதி, நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
