ADDED : செப் 18, 2025 02:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் கணவர் கற்பகராஜை 28, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி ராஜலட்சுமிக்கு 25, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாத்துார் சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் கற்பகராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள னர். ராஜலட்சுமி அடிக்கடி அலைபேசியில் பேசிய தால் தம்பதி யிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்னையில் 2023 செப். 6 இரவில் வீட்டில் இருந்த கற்பகராஜ் சேலையால் கழுத்து நெரித்து கொலை செய்யப் பட்டு கிடந்தார்.
இவ்வழக்கில் மனைவி ராஜலட்சுமி, மாமியார் பழனியம்மாள் 49, சிவகாசியை சேர்ந்த ஸ்வீட்டி 22, அவரது கணவர் வேலா யுதம் 25, ஆகியோரை சாத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ராஜலட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி ஜெயக் குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.