/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த கணவர்
/
மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த கணவர்
ADDED : ஜூன் 21, 2025 09:04 PM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் குடும்ப தகராறில் மனைவி கஸ்துாரி 50, மீது கணவர் நாகேந்திரன் 58, பெட்ரோல் ஊற்றி எரித்ததில் சம்பவயிடத்திலேயே பலியானார். ஆபத்தான நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரியாபட்டி அச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி கஸ்துாரி இட்லி கடை நடத்தி வந்தார். நாகேந்திரன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நாகேந்திரன் அதிகாலை 4:00 மணிக்கு கஸ்துாரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் நாகேந்திரன் மீதும் தீப்பற்றியது. இதில் கஸ்துாரி சம்பவயிடத்திலே பலியானார். நாகேந்திரன் தீக்காயமுற்ற நிலையில் உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.