ADDED : ஏப் 12, 2026 03:59 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி யில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு பாதாள சாக்கடை திட்ட பணிகளை செய்து கொடுப்பேன், என காங்., வேட்பாளர் அசோகன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
சிவகாசியில் சீதக்காதி நடுத்தெரு, வடக்கு தெரு, தைக்கா தெரு, மீரா உசேன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலின் போது நான் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளேன். இந்த முறையும் நான் வெற்றி பெற்ற வுடன் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறை வேற்றி தர பாடுபடுவேன். ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முழுவதும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். குறிப்பாக பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செய்து கொடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., மாநகர செயலாளர் உதயசூரியன் மேயர் சங்கீதா, பகுதி செயலாளர் காளிராஜன் கட்சி யினர் கலந்து கொண்டனர்.
