/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குவாரி அமைத்தால் விவசாயம் நீர் வழித்தடம் அழிக்கப்படும்
/
கல்குவாரி அமைத்தால் விவசாயம் நீர் வழித்தடம் அழிக்கப்படும்
கல்குவாரி அமைத்தால் விவசாயம் நீர் வழித்தடம் அழிக்கப்படும்
கல்குவாரி அமைத்தால் விவசாயம் நீர் வழித்தடம் அழிக்கப்படும்
ADDED : பிப் 19, 2025 04:59 AM

அருப்புக்கோட்டை : திருச்சி அருகே குண்டாறு பகுதியில் கல்குவாரி அமைத்தால் விவசாயம் மற்றும் நீர் வழித்தடம் பாதிக்கப்படும் என அருப்புக்கோட்டையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ.,வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார்.
அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாய சங்க தலைவர் ராம்பாண்டியன்: திருச்சுழி அருகே தண்டியநேந்தல் பகுதியில் உள்ள குண்டாறு அருகே கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இங்கு கல்குவாரி அமைந்தால் விவசாயம், நீர் வழித்தடம் பாதிக்கப்படும்.
கல்குவாரி அமைப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். தற்போது நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டம் அனைத்தும் கண் துடைப்பாகவே உள்ளது. கல்குவாரி அமைக்க விவசாயிகள் விரும்பவில்லை.
வள்ளிக்கண்ணு, ஆர்.டி.ஓ.,: கல்குவாரி அமைக்க அனுமதி தரப்பட மாட்டாது.
சிவசாமி, விவசாயி, முடுக்கன்குளம்: காட்டுப்பன்றிகள் குறித்து கண கெடுக்கப்படுவது என்ன ஆனது. வனவிலங்குகளை கணக்கெடுப்பது போல் காட்டு பன்றிகளையும் கணக்கு எடுக்க வேண்டும்.
இவைகளினால் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன. முடுக்கன்குளம் சிவன் கோயிலில் சிவராத்திரி அன்று சூரிய ஒளி உள்ளே விழும். தற்போது அங்குள்ள கண்மாயைச் சுற்றி மறைத்து சுவர் கட்டி விட்டதால் ஒளி விழுவது இல்லை. கோயிலில் சூரிய ஒளி விழுமாறு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், விவசாயி, பரளச்சி: பரளச்சி பகுதியில் வெள்ள நிவாரணம் கணக்கெடுத்து பல மாதங்கள் ஆகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.
திருச்சுழி ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். எம்.ரெட்டியபட்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
மச்சேஸ்வரன், விவசாயி: பொதுப்பணித்துறை கண்மாய்களை கணக்கெடுத்து சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.