/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதிப்பு: சுற்றுலா தலங்கள் வளர்ச்சிகள் அரசு அறிவிப்போடு இன்று வரை நிதி ஒதுக்காததால் பயணிகள் பாதிப்பு
/
பாதிப்பு: சுற்றுலா தலங்கள் வளர்ச்சிகள் அரசு அறிவிப்போடு இன்று வரை நிதி ஒதுக்காததால் பயணிகள் பாதிப்பு
பாதிப்பு: சுற்றுலா தலங்கள் வளர்ச்சிகள் அரசு அறிவிப்போடு இன்று வரை நிதி ஒதுக்காததால் பயணிகள் பாதிப்பு
பாதிப்பு: சுற்றுலா தலங்கள் வளர்ச்சிகள் அரசு அறிவிப்போடு இன்று வரை நிதி ஒதுக்காததால் பயணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 28, 2025 12:17 AM

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் சிறப்பு திட்டங்கள் அறிவித்து ஆறு மாதங்கள்கடந்தும் பணிகள் தொடங்காமல் உள்ளது.
மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்கள் என மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், பகுதியில் மட்டுமே அமைந்துள்ளது.
இதில் ராஜபாளையம்அடுத்த தேவதானம் சாஸ்தா கோயிலுக்கு ரூ.1.70 கோடி,, ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த வத்திராயிருப்பு பிளவக்கல் அணை, பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தனது சுற்றுப்பயணத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இதில் சாஸ்தா கோயில் அருவி குற்றாலம் அருவி வற்றினாலும் இங்கு லேசான சாரலுக்கே வருடம் முழுவதும் தண்ணீர் பெருகி ஓடும் அமைப்பை கொண்டுள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு விடுமுறை தினங்களில் மக்கள் குளித்து மகிழ அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் பெண்கள்குளித்து உடை மாற்றவோ, பாதுகாப்பிற்கோ எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. வெளியூரிலிருந்து நம்பி வரும் சுற்றுலா பயணிகள் தங்குமிடம், உணவு, அருவி பற்றிய விளக்க கையேடு என அரசு சார்பில் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து செல்லும் நிலை உள்ளது.
மலையும் அதனை ஒட்டிய பசுமை சூழ்ந்த சுற்றுலா தலங்களாக அமைந்த இப்பகுதிகளுக்கு கடந்த ஆண்டு நவ. மாதம் முதல்வர் திட்டங்களை அறிவித்தும் அதற்கான நீதி ஒதுக்காததால் தற்போது வரை பணிகள் தொடங்கவில்லை.
சாஸ்தா கோயில் வனப்பகுதி ஏற்கனவே கண்காணிப்பின் கீழ் இருந்து முறையான பாதுகாப்புடன் வனப்பகுதியின் தொடக்கம் முதல் அருவி வரை வாகனத்தின் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நேரம் செலவழித்த பின் மீண்டும் கொண்டு வந்து விடப்படுகிறது.
மாவட்டத்தில் விடுமுறை காலங்களில் இயற்கையை காப்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புடன் நேரங்களைப் போக்க முதல்வர் அறிவித்து ஆறு மாதங்களாக கிடப்பில் உள்ள திட்டத்திற்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.