/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்
/
முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்
முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்
முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்
ADDED : டிச 02, 2024 05:11 AM
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவித்யா பொறியியல் கல்லுாரி இணைந்து நடத்திய பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் குறித்த கருத்தரங்கு நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய இரு தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்காற்ற இருக்கின்றன. இது குறித்து இன்று பள்ளி, கல்லுாரியில் படிக்க கூடிய மாணவர்கள் தெரிந்து கொண்டால், அவர்களுடைய எதிர்கால பணி அல்லது தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
இதில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு, இன்டெஸ்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.