/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
/
சாத்துாரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
சாத்துாரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
சாத்துாரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
ADDED : அக் 01, 2024 04:37 AM

சாத்துார்: சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலை மேற்கு புற சர்வீஸ் ரோடு அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
சாத்துார் நகராட்சிக்கு நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பகிர்மானக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பம்பிங் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் குடிநீரின் பெரும் பகுதி காட்டுப் பகுதியில் வெளியேறி வீண் ஆகிறது.
இதனால் நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையின் மேற்கு பக்க சர்வீஸ் ரோட்டில் அயன்சத்திரப்பட்டி கிராமம் அருகில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்த சர்வீஸ் ரோட்டில் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு குடிநீர்குழாய் அடிக்கடி உடைந்து வருகிறது. உடைப்பை சரி செய்தாலும் தொடர்ந்து குழாய் உடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது.
எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ரோட்டின் அடியில் உள்ள குழாய்களை நகர்த்தி ரோடு ஓரத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.