/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : மார் 15, 2024 06:28 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை குல்லூர்சந்தை உட்பட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குல்லூர்சந்தை ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக ரூ.14.6 கோடி மதிப்பீட்டில் 2 ம் கட்டமாக 244 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி செவல் கண்மாயில் ரூ.3.54 கோடியில் புணரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாக்குளத்தில் ரூ.13 லட்சம் மதிப்பு நிதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை திறந்து வைத்தார்.
நகராட்சி 8 வது வார்டு பகுதியில் சூரிய ஒளி மின் சக்தியில் இயங்க கூடிய நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

