/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகதிகள் முகாம் குடியிருப்பு திறப்பு விழா
/
அகதிகள் முகாம் குடியிருப்பு திறப்பு விழா
ADDED : அக் 18, 2024 04:44 AM
சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளம், செவலுார் இலங்கை அகதிகள் முகாம்களில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகள் திறப்பு விழா நடந்தது.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் செவலுாரில் அகதிகள் முகாம்களில் ரூ.1.80 கோடியில் 32 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தது.
இதன் திறப்பு விழாவில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா, ஒன்றிய குழு துணைத் தலைவர் விவேகன் ராஜ், ஊராட்சித் தலைவர் கவிதா முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளின் சாவிகளை வழங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.