ADDED : பிப் 25, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் கட்டப்பட்டிருந்த அறிவு சார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் கலைஞர் நகர் புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி 61 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டது. இதில் திறன் மேம்பாட்டு அறை, வாசிப்பு பகுதி, சிறுவர் வாசிப்பு பகுதி, கன்னி பயன்பாட்டு வாசிப்பு பகுதி, ஸ்மார்ட் வகுப்பறை என பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்நிலையில் இந்த அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.