/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தென்னை பாதிப்புகள் அதிகரிப்பு; இழப்பை தடுக்குமா வேளாண், காலநிலை மாற்றத்துறை
/
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தென்னை பாதிப்புகள் அதிகரிப்பு; இழப்பை தடுக்குமா வேளாண், காலநிலை மாற்றத்துறை
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தென்னை பாதிப்புகள் அதிகரிப்பு; இழப்பை தடுக்குமா வேளாண், காலநிலை மாற்றத்துறை
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தென்னை பாதிப்புகள் அதிகரிப்பு; இழப்பை தடுக்குமா வேளாண், காலநிலை மாற்றத்துறை
ADDED : ஜூலை 24, 2025 04:44 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தென்னையில் வெள்ளை ஈ போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளது. மகசூல் இழப்பை தடுக்க வேளாண், காலநிலை மாற்றத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை, ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் 10 ஆயிரத்து 660 எக்டேருக்கு தென்னை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. 2024ல் ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலால் 1180 எக்டேர் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் 2025 மார்ச், ஏப்ரல் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்தது. அதே போல் காற்று வீசும் மாதமான தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் தென்னை சாகுபடி மீண்டும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
வெள்ளை ஈ தாக்கத்திற்கு பிறகு தென்னைகளுக்கு உயிரூட்டம் அளிக்க தென்னை டானிக் வழங்க வேண்டும் என 2025 ஜன. ல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது பருவ நிலை மாற்றத்தால் தென்னையில் ஆங்காங்கே சிலந்தி நோய் தாக்கம் காணப்படுகிறது. தென்னையில் சிலந்தி நோய் என்பது செம்பான் சிலந்தி தாக்குதலால் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். இது குரும்பைகளின் மென்மையான திசுக்களில் சாற்றை உறிஞ்சியதால், பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றி, குரும்பைகள் சிறுத்து உதிர்ந்துவிடும்.
தற்போது பருவநிலை மாற்றம் இந்த பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்ற தாழ்வான ஈரப்பதம், கடும் வெயில் காரணமாக வெள்ளை ஈ, சிலந்தி நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இது பருவநிலை மாற்ற பாதிப்பு என்பதால் வேளாண்துறை இது குறித்தான ஆலோசனை, கூட்டங்களை காலநிலை மாற்றத்துறையுடன் இணைந்து நடத்த வேண்டும்.
மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விஞ்ஞானிகளை வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயமுருகன் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் தென்னையில் புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. தென்னை வாடல் நோய், குருத்து அழுகல் நோய் ஏற்படுகின்றன. மேலும் ரூக்கோஸ் வெள்ளை ஈ நோய் வெயில் காலத்தில் அகோரமாக பரவுகிறது. காய்ப்பு பாதியாக குறைகிறது. ஏப். மே மாதங்களில் ஏற்பட்ட காய்ப்பு குறைவு தான் தற்போது தேங்காய் விலை ஏறியதற்கு முக்கிய காரணம். இதை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கை அவசியம், என்றார்.