/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சிகளில் கொசுத்தொல்லை அதிகரிப்பு; சளி, இருமலால் மக்கள் அவதி
/
உள்ளாட்சிகளில் கொசுத்தொல்லை அதிகரிப்பு; சளி, இருமலால் மக்கள் அவதி
உள்ளாட்சிகளில் கொசுத்தொல்லை அதிகரிப்பு; சளி, இருமலால் மக்கள் அவதி
உள்ளாட்சிகளில் கொசுத்தொல்லை அதிகரிப்பு; சளி, இருமலால் மக்கள் அவதி
ADDED : பிப் 03, 2024 06:09 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உள்ளாட்சிகளில் மழை முடிந்த பின்னும் தற்போது வரை விடாது துரத்தும் கொசுத்தொல்லையால் சளி, இருமலால் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
2023ல் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. எதிர்பாராத டிச. 18, 19ல் அறுவடை நேரத்தில் அதிகளவில் பெய்ததால் பயிர்கள் பாழாகின. இந்தாண்டு விளைச்சல் பாழாகியது. அதே போல் மாவட்டத்தின் பல கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில் மழைக்காலம் முடிந்த பின்னும் கொசுத்தொல்லை விடாது துரத்துகிறது. மழைக்கால கொசு ஒழிப்பு பணியில் கை கட்டி வேடிக்கை பார்த்தது போன்றே தற்போதும் வேடிக்கை பார்க்கிறது. பெரும்பாலான நகராட்சி பகுதிகளிலும் சரி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் சரி காலிமனைகளில் தேங்கிய நீர் வற்றவும் இல்லை, வடியவும் இல்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
மாலை 6:00 மணி முதலே பனி வீச துவங்குகிறது. அதே நேரம் கொசுக்களும் வீடுகளை நோக்கி படையெடுக்கிறது. பணி முடிந்து வீடு திரும்புவோர், பள்ளி முடிந்து டியூசன் செல்லும் மாணவர்கள் கொசுக்கடியுடன் செல்ல வேண்டி உள்ளது. இதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பலருக்கும் சளி, இருமல் அதிகரித்து சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சிகளில் தேவையான கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் போதிய பணியிடங்கள் இல்லை. ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு மஸ்துார்களும் அதிகளவில் இல்லை. இதனால் கொசு ஒழிப்பு பணிகள் மந்தமாகவே உள்ளன.கொசு ஒழிப்பு பணிகள் செய்வதில் உள்ள சிக்கல்களை கண்டறிய வேண்டும். இல்லையென்றால் 2024 பருவமழையின் போதும் தீவிர கொசுத்தொல்லையை மக்கள் சந்திக்க நேரிடும். மேலும் மக்களுக்கும் கழிவுநீர், நன்னீரை அதிகளவில் தேங்காமல் இருக்க செய்ய தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பழைய எண்ணெயை காலிமனைகளில் தேங்கி நிற்கும் நீரில் விடுவதன் மூலம் கொசுத்தொல்லை கட்டுப்படும். மக்களும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட அறிவுறுத்தலாம். மேலும் உள்ளாட்சிகளும் கொசு மருந்து தெளித்து நோய் தொற்றுதலை தடுக்க வேண்டும்.

