/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரிப்பு: பயனாளிகளை குறிவைக்கும் கும்பல்களால் சிரமம்
/
அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரிப்பு: பயனாளிகளை குறிவைக்கும் கும்பல்களால் சிரமம்
அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரிப்பு: பயனாளிகளை குறிவைக்கும் கும்பல்களால் சிரமம்
அலுவலகங்களில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரிப்பு: பயனாளிகளை குறிவைக்கும் கும்பல்களால் சிரமம்
ADDED : டிச 20, 2024 02:18 AM
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, வேளாண், தோட்டக்கலைத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களில் பயன்பெறவும், நகராட்சிகள், தாலுகா அலுவலகங்களில் சான்றுகள் வாங்குவதற்கும் இடைத்தரகர்கள் குறுக்கே வந்து தொல்லை தருவது அதிகரித்துள்ளது.
இக்கும்பல்கள் அனைத்து தாசில்தார், நகராட்சி அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகத்திலும் முகாமிட்டு திட்டம் தொடர்பாக அதிகாரிகளை தேடி வரும் பயனாளிகளை நோட்டமிடுகின்றனர். பின் அவர்களை நேரடியாக கண்காணித்து தான் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு வேண்டப்பட்டவர் என்பது போலவும், அந்த அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் தன்னிடம் நன்றாக பழகுவதாக கூறுகின்றனர்.
சான்று பெற வருவோரிடமும் விரைவில் வேலையை முடித்து தருவதாக கூறி குறிப்பிட்ட தொகை பெறுகின்றனர். பயனாளிகளிடம் குறிப்பிட்ட தொகை பெற்று கொண்டு அதை சில அலுவலர்கள், அதிகாரிகளுக்குகவனிப்பு செலுத்தி பின் திட்டங்களை நிறைவேற்றிட உதவுகின்றனர்.
அரசு துறையில் எவ்வித உரிமையும் இல்லாத இந்த இடைத்தரகர்கள் உண்மையில் திட்டம் சென்றடைய வேண்டியவர்களையும், பணம் இல்லாதவர்களையும் நசுக்குகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதனால் திட்டங்கள் ஒவ்வொன்றும் 'கவனிப்பவர்களையே' அதிகம் சென்றடைகிறது.
அதிகாரிகளே புகார் செய்யும் அளவுக்கு இடைத்தரகர்கள் தற்போது பெருகி விட்டனர். அதிகளவில் திட்டங்களை கொண்டுள்ள துறைகளில் இது அடிக்கடி நடக்கிறது.
வேலை எதுவுமின்றி கலெக்டர் அலுவலகத்தையே சுற்றி சுற்றி நடமாடி திரியும் பலர் திடீர் இடைத்தரகர்களாக மாறி அரசு திட்டங்கள் கிடைக்க உதவுகின்றனர். அதற்கு சில அலுவலர்களும் துணை போகின்றனர். இதை தடுப்பதில் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் பங்கு மிக அவசியம்.
இது போல அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் பணம் கேட்கும் அரசு ஊழியர்களை கைது செய்வது போல் உடனிருக்கும் இடைத்தரகர்களையும் கண்டறிந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆகவே இடைத்தரகர்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.