/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'மயோனைஸ்' புழக்கம் அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை சோதனை அவசியம்
/
'மயோனைஸ்' புழக்கம் அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை சோதனை அவசியம்
'மயோனைஸ்' புழக்கம் அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை சோதனை அவசியம்
'மயோனைஸ்' புழக்கம் அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை சோதனை அவசியம்
ADDED : மே 25, 2025 10:59 PM
விருதுநகர்: விருதுநகரில் மாலை நேரத்தில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'மயோனைஸ்' பயன்பாடு படுஜோராக நடக்கிறது. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, மதுரை ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, தாலுகா அலுவலகத்தின் ரோட்டில் அதிக அளவில் மாலை நேர உணவகங்கள் செயல்படுகிறது.
இவற்றில் பெரும்பாலும் பானிபூரி, எக் ரைஸ், சிக்கன் ரைஸ், தந்துாரி வகைகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட அசைவ உணவுகள் விற்கப்படுகிறது. இது போன்ற உணவுகளில் ஒரு முக்கிய சேர்க்கையாக முட்டைகளால் செய்யப்பட்ட 'மயோனைஸ்' மாறியுள்ளது. விருதுநகரில் உள்ள மாலை நேர உணவகங்கள் சிலவற்றில் மயோனைஸ் பயன்பாடு எவ்வித தடையின்றி சீராக நடக்கிறது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஓட்டல்களில் உண்பவர்களுக்கு அங்கேயும், பார்சல் வாங்குபவர்களுக்கு சிறு பாக்கெட்களிலும் அரசாங்கம் தடை விதித்த 'மயோனைஸ்' பயன்படுத்துகின்றனர். இது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித ஆய்வும் செய்யாததால் சில கடைகளில் உள்ள பயன்பாடு தற்போது அனைவரும் பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக மாறியுள்ளது.
எனவே மாலை நேரங்களில் உள்ள உணவகங்களில் தடை 'மயோனைஸ்' பயன்பாடு, குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சிகள் பதப்படுத்துவது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.