/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை அதிகரிப்பு கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் தேவை
/
அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை அதிகரிப்பு கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் தேவை
அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை அதிகரிப்பு கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் தேவை
அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை அதிகரிப்பு கூடுதல் டாக்டர்கள், பணியாளர்கள் தேவை
ADDED : ஜூலை 12, 2025 04:01 AM

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் தினசரி எக்ஸ்ரே, சி.டி.,ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனைகள் துவங்கிய போது இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்ட போது 640 படுக்கைகள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவமனையில் ஒரு நாளைக்கு எக்ஸ்ரே 200 பேருக்கும்,சி.டி., ஸ்கேன் 120 முதல் 160 பேருக்கும், எம்.ஆர்.ஐ., 15 முதல் 20 பேருக்கும் எடுக்கப்படுகிறது. இது தவிர மார்பக புற்றுநோய்க்கான மெமோகிராம் பரிசோதனையும் எடுக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை மருத்துவமனை துவங்கி நாளில் எடுக்கப்பட்டதை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பரிசோதனைகளை எடுக்கும் டெக்னீசியன்கள், முடிவுகளை தயாரிக்கும் மருத்துவர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்படவில்லை. தமிழக அரசு அனைத்து விதமான நவீன பரிசோதனை மிஷின்களை வழங்கினாலும், கூடுதல் டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்காததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகளை தடையின்றி கொடுப்பதற்காக மருத்துவர்கள் பணிச்சுமையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் ஒரு மருத்துவர் விடுப்பு எடுத்துக் கொண்டால் பரிசோதனை முடிவுகள் தேங்கி விடும் என்பற்காக விடுப்பு எடுக்க தயங்குகின்றனர்.
இதற்கு தகுந்தாற் போல விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரேடியாலஜி துறையில் கூடுதல் டாக்டர்கள், டெக்னீசியன்கள், பணியாளர்களை நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.