/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடியில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு பக்தர்கள் அதிருப்தி
/
இருக்கன்குடியில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு பக்தர்கள் அதிருப்தி
இருக்கன்குடியில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு பக்தர்கள் அதிருப்தி
இருக்கன்குடியில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 26, 2025 03:25 AM
சாத்துார்: இருக்கன்குடியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வது அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஓரிரு நாள் அப்பகுதியில் உள்ள இலவச தங்கும் விடுதிகளில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்வதோடு நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர்.
இப்படி நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு அனுமதி இன்றி இந்த பகுதியில் மதுபானம் விற்பதும் அதிகரித்து வருகிறது. இரவு, காலை என்ற பாகுபாடு இன்றி எல்லா நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
ஆற்றங்கரை பகுதியிலும் காட்டுப்பகுதியிலும் மது பிரியர்கள் குடித்துவிட்டு வீசும் பிளாஸ்டிக் கழிவுகளும் காலியான மது பாட்டில் ஏராளமாக பரவி கிடப்பதால் வெளியூர் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.
உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதும் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
போலீசார் இருக்கன்குடி கோயில் மற்றும் ஊர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதை தடுத்திட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

