தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நெசவுக்கூலி உயர்வு

நெசவுக்கூலி உயர்வு

நெசவுக்கூலி உயர்வு


UPDATED : அக் 17, 2026 07:39 PM

ADDED : அக் 17, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 07:39 PM ADDED : அக் 17, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பொங்கல் 2027ல் உற்பத்தி செய்யப்படும் புதிய ரக வேட்டி, சேலை ரகங்களுக்கு வழங்கப்படும் நெசவு கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

நெசவுக்கு முந்தைய கூலி சேலை ஒன்றுக்கு பழைய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.28 வழங்கப்பட்ட நிலையில் புதிய ரக பெடல்தறி சேலைக்கு அதே ரூ.28 வழங்கப்படுகிறது.

மேலும் நெசவு கூலி சேலை ஒன்றுக்கு ரூ.75.95 வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.97.72 நிர்ணயம் செய்து கூடுதலாக ரூ.21.77 வழங்கப்படுகிறது.

மொத்த கூலியாக சேலை ஒன்றுக்கு பழைய ரக பெடல் தறி சேலைக்கு ரூ.103.95 வழங்கப்பட்ட நிலையில் புதிய ரக பெடல்தறி சேலைக்கு ரூ.125.72 நிர்ணயம் செய்து கூடுதல் கூலியாக ரூ.21.77 வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us