/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
/
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
ADDED : மே 31, 2025 11:26 PM
காரியாபட்டி: கல்குறிச்சியில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி கல்குறிச்சிக்கு சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சென்று வருவதால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பஜார் பகுதியில் கடைக்காரர்கள் ஷெட் அமைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இரு வாகனங்கள் விலகிச் செல்ல போதிய இடவசதி கிடையாது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கார், டூவீலர்கள், சைக்கிள்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடியால் படாத பாடுபடுகின்றனர். நடந்து செல்பவர்கள் ரோட்டை விட்டு இறங்கி செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, மீண்டும் ஆக்கிரமிக்காதபடி தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.