/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., மருத்துவமனையை சுற்றி அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் உயிர்காக்கும் சிகிச்சை பெறுவதில் தாமதமாகும் நிலை

ADDED : அக் 11, 2025 03:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையை சுற்றி நாளுக்கு நாள் பெருகும் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ்கள் எளிதில் வர முடியாமல் உயிர்காக்கும் சிகிச்சை பெறுவதில் நோயாளிகளுக்கு காலதாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் எந்த ஊரிலும் இல்லாத வகையில் பஸ் ஸ்டாண்டின் எதிர்புறத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
இதனால் சாதாரண நாட்களில் ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் வரும் நிலையில், பருவ மழை காலங்களில் இரண்டு மடங்கு நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியாத அளவிற்கு அரசு மருத்துவமனை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து மணிக்கூண்டு வழியாக மருத்துவமனைக்கு வரும் பாதையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் வடக்கு பகுதியில் நகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் இரண்டு அடுக்கில் நிறுத்தப்படுவதால் நடந்து செல்வதில் கூட சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. வடக்கு பகுதி உழவர் சந்தை ரோட்டில் ஆட்டோக்களும், மீன் கடைகளின் தள்ளு வண்டிகளும் நிறுத்தப்படுகிறது.
இதனால் உயிர்காக்கும் சிகிச்சை பெற நோயாளிகளை அழைத்து வருவதில் ஆம்புலன்ஸ்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன. அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.