/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் மக்கள் அவதி
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் மக்கள் அவதி
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் மக்கள் அவதி
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் மக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 01:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பெரும்பாலான தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து எளிதில் மக்கள் வந்து செல்ல முடியாத நிலை அதிகரித்து வருகிறது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் 33 வார்டுகளிலும் பெரும்பாலான தெருக்களில் நகராட்சிக்கு சொந்தமான பொது பாதைகள், காலியிடங்களில் கார், வேன்களை நிறுத்தியும், வாகனங்களுக்கு தகர செட்டுகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில் அகலமான தெருக்களில் ரோட்டில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்படுவதால் எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதேபோல் குறுகிய தெருக்களிலும் கார், வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், பஜார் வீதியில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் முழு அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகரின் அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார், வேன்களை அப்புறப்படுத்தி மக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.