/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,பஜார் வீதிகளில் அதிகரிக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு
/
ஸ்ரீவி.,பஜார் வீதிகளில் அதிகரிக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு
ஸ்ரீவி.,பஜார் வீதிகளில் அதிகரிக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு
ஸ்ரீவி.,பஜார் வீதிகளில் அதிகரிக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 28, 2024 07:03 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஜார் வீதிகளில் நடைபாதைகளை வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் டூவீலர்கள் போக்குவரத்திற்கு நெருக்கடியாக நிறுத்தப்படுவதாக கூறி போலீசார் அபராதம் விதிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அதனை சுற்றியுள்ள பஜார் வீதிகள், நகைக்கடை பஜார், பெரிய கடை பஜார், வடக்கு ரத வீதி, சின்ன கடை பஜார், ராமகிருஷ்ணாபுரம் உட்பட அனைத்து பஜார் வீதியிலும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் டீக்கடைகள், பழக்கடைகள், பாஸ்ட் புட் கடைகள் உட்பகுதியை காலியாக போட்டு நடை பாதையை ஆக்கிரமிக்கின்றனர். இதே போல் ஓட்டல்களும், காய்கறி கடைகளும் நடைபாதையை ஆக்கிரமிப்பதில் போட்டி போட்டு வருகின்றனர்.
இது தவிர மற்ற அனைத்து கடைகளுமே நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர் இதனால் அந்த கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களின் டூவீலர்கள் ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது.
இவ்வாறு பஜார் வீதிகளில் எல்லை கோட்டை தாண்டி நிறுத்தப்படும் டூவீலர்களை போலீசார் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இது குறித்து மெசேஜ் வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.
எனவே, பஜார் வீதியில் அனைத்து வணிக நிறுவனங்களும் நடைபாதை ஆக்கிரமிப்பை கைவிடுவதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற தினமும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

