sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தென்னையில் அதிகரிக்கும்வெள்ளை ஈ தாக்குதல் பரிதவிப்பு விலை அதிகரித்தும்விளைச்சல் குறைவால் பாதிப்பு

/

தென்னையில் அதிகரிக்கும்வெள்ளை ஈ தாக்குதல் பரிதவிப்பு விலை அதிகரித்தும்விளைச்சல் குறைவால் பாதிப்பு

தென்னையில் அதிகரிக்கும்வெள்ளை ஈ தாக்குதல் பரிதவிப்பு விலை அதிகரித்தும்விளைச்சல் குறைவால் பாதிப்பு

தென்னையில் அதிகரிக்கும்வெள்ளை ஈ தாக்குதல் பரிதவிப்பு விலை அதிகரித்தும்விளைச்சல் குறைவால் பாதிப்பு


ADDED : ஜன 17, 2026 06:00 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளானரூகோஸ் வெள்ளை ஈக்கள் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்திவருவதால் விலை அதிகரித்தும் பலனின்றி வழி தெரியாமல்

விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜ பாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் மட்டும் சிறப்பு கவனம், பராமரிப்பு குறைவு, நீடித்த தொடர் மகசூல் என்ற பல்வேறு காரணங்களுக்காக விவசாய நிலங்களில் தென்னை சாகுபடி பெரும்பாலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கு தல் சமீப காலமாக அதி கரித்து பரவ தொடங்கியது. இவற்றிற்கு சுலபமாக பரவுவதற்கு வறட்சிக் காலம் வழி வகுத்ததுடன் வெள்ளை நிற ஈக்களின் குஞ்சுகள் இலைகளுக்கு பின்னால் ஒட்டியிருந்து சாறு உறிஞ்சுகிறது.

ஈக்கள் இனிப்பான திரவம் போன்ற கழிவை வெளியேற்றுவதின் மீது பூஞ்சானம் வளர்ந்து இலைகள் கருப்பு நிறமாகி ஒளிச்சேர்க்கை பாதிக்கப் படுகிறது.

இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ரசாயன பூச்சிக்கொல்லியை பயன்படுத்து வதால் முழுமையான பயனில்லை. மஞ்சள் வண்ண பாலித்தீன் காகிதத்தில் விளக்கெண்ணை தடவி மரத்தைச் சுற்றி கட்டுவதும், விளக்கு பொறி, இலைகளுக்குப் பின் உள்ள வெள்ளை ஈக்களை அதிக வேகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெளியேற்றுவது என தடுப்பு முறைகளை பரிந்துரைத்தாலும் இவை கட்டுப்பட்டதாக தெரியவில்லை.

இவற்றின் அதீத பரவல் ஏற்கனவே மரங்களின் வளர்ச்சியை பாதித்ததோடு விளைச்சலும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது ஒரு சில விவசாயிகள் தடுப்பு முறைகளை முறையாக கையாண்டும் மற்ற பகுதிகளில் இருந்து மீண்டும் பரவுவதால் இதை கட்டுப் படுத்தும் வழிமுறை தெரியாமல் பாதித்து வருகின்றனர்.

ஏற்கனவே உழவு, உரம், பராமரிப்பு செலவு என சாகுபடி செலவு அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் விலை அதிகரித்தும் விளைச்சல் குறைந்ததால் அதன் பலன் முழுமையாக விவசாயிகளை சென்று சேரவில்லை.

எனவே கேரள மாநில அரசு எடுத்துள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை போல் முழுமையாக அனைத்து பகுதிகளும் நடைமுறைப்படுத்தி பிரச்சனையை முடிவு கொண்டு வந்து தென்னை விவ சாயத்தை காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us