தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுதந்திர தினவிழா

சுதந்திர தினவிழா

சுதந்திர தினவிழா


ADDED : ஆக 15, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் செயலாளர் மகேஷ்பாபு கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் சாரதி வரவேற்றார். இதில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., இளைஞர் செஞ்சிலுவை சங்கம், உடற்கல்வித்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

* ஷத்திரிய வித்தியாசாலா மானேஜிங் போர்டு பாத்தியப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் செயலாளர் பொன்ராஜன் தலைமையில் சுதந்திர தினவிழா நடந்தது.

* விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் மானேஜிங் போர்டு உபதலைவர் வெங்கடேசன் கொடி ஏற்றினார்.

* ஷத்திரிய வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மானேஜிங் போர்டு செயலாளர் பொன்ராஜன் கொடி ஏற்றினார்.

* திருவள்ளுவர் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மானேஜிங் போர்டு பொருளாளர் ரத்தினவேல் கொடி ஏற்றினார்.

* கே.காமராஜ் வித்தியாசாலா நடுநிலைப்பள்ளியில் மானேஜிங் போர்டு உறுப்பினர் பழனிசாமி கொடி ஏற்றினார்.

* சுப்பிரமணிய வித்தியாசலா ஆரம்பப்பள்ளியில் மானேஜிங் போர்டு உறுப்பினர் செல்வகணேஷ் கொடி ஏற்றினார்.

* சரஸ்வதி வித்தியாசாலா ஆரம்பப்பள்ளியில் மானேஜிங் போர்டு உறுப்பினர் சிவானந்தம் கொடி ஏற்றினார்.

* கி.பெ., பெரியகருப்ப நாடார் ஆரம்பப்பள்ளியில் மானேஜிங் போர்டு உறுப்பினர் மதன் கொடி ஏற்றினார்.

* ஷத்திரிய வித்தியாசாலா நுாற்றாண்டு பள்ளியில் மானேஜிங் போர்டு தலைவர் அரசன் கணேஷ்குமார் கொடி ஏற்றினார்.

அருப்புக்கோட்டை * ஆ. கல்லுபட்டி சித்தி விநாயகர் இந்து துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

* சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் தலைவர் ரமேஷ்குமார் கொடி ஏற்றினார். செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் கந்தவேல்சாமி வரவேற்றா.ர். பொருளாளர் முருகேசன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மாணவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* சௌடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் செயலர் ராஜேந்திரன் கொடியேற்றினார். முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

* சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரியில் கல்லூரி பொருளாளர் முருகேசன் கொடியேற்றினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி , ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் வ. உ. சிதம்பரனார் பேரன் சிதம்பரம் கொடியேற்றினார். கேப்டன் சுபேதார் உதயசூரியன், கேப்டன்கள் மருதகாசி, கணேசன், சுபேதார் மாடசாமி ஆகியோர் பேசினர். மகளிர் கல்லூரி செயலாளர் டாக்டர் இளங்கோவன் வரவேற்றார். கல்லூரி தலைவர் ராமச்சந்திரன், கல்வியியல் கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், முதல்வர் தில்லை நடராஜன், போக்குவரத்து செயலர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

* அருப்புக்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் ராமலட்சுமி கொடியேற்றினார். அலுவலக பணியாளர்கள் தமிமுன் அன்சாரி, ராம்வெங்கடேஷ், ராஜசேகர், சாந்தி கலந்து குமார் கலந்து கொண்டனர்.

* ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.

சிவகாசி * சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லுாரி முதல்வர் விஜயராணி தேசியக்கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

* சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் டிரஸ்ட் நிறுவனர் செய்யது ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். செயலாளர் ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தார். செய்யது முஸ்தபா வரவேற்றார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தேசியக்கொடி ஏற்றினார். திருத்தங்கல் ஜெபமே ஜெபம் திருச்சபை தேவாலய பாஸ்டர் பிரகாஷ், கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் * மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாளாளர் குருவலிங்கம் தலைமையில், நிர்வாக அலுவலர் சித்ரா மகேஸ்வரி முன்னிலையில் முதல்வர் சிவப்பிரியா கொடியேற்றினார். பிரைமரி பள்ளியில் முதல்வர் வைதேகி கொடியேற்றினார்.

* லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தாளாளர் வெங்கடாசலபதி தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. தேசிய கொடியை லயன்ஸ் சங்க தலைவர் சதர்ம சாதனா, ஒலிம்பிக் கொடியை செயலர் சிவகுருநாதன், பள்ளி கொடியை உறுப்பினர் அகமது அனாஸ் ஏற்றினர். விழாவில் முன்னாள் மாணவி டாக்டர் அஸ்மா, முதல்வர் சண்முகவேல் பேசினர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.

* வள்ளுவர் வித்யாலயா பள்ளியில் தாளாளர் சிவகுமாரன் கொடியேற்றினார். முதல்வர் சரவண ராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் அரிமா சங்கத் தலைவர் முத்துவேல் கொடியேற்றினார். பள்ளி நிர்வாகிகள் சுந்தரராஜ பெருமாள், விஜயகுமார், டாக்டர் பால்சாமி, ஆரியன் மதுரம் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

* நகர் காங்கிரஸ் ி சார்பில் கிருஷ்ணன் கோவிலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகள் வன்னிய ராஜ், பெரியசாமி, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜபாளையம் * ராஜபாளையம் பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாரிமுத்து கொடியேற்றினர். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரண மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் கஜேந்திரன், கோகுல் பேசினர்.

* ந.அ. அன்னப்ப ராஜா மேல்நிலை பள்ளி செயலர் சுதர்சன் ராஜூ தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் கொடியேற்றினார். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர் படை அணிவகுப்பு நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

* ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறவின்முறை தலைவர் பாலு தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பாஸ்கர் கொடியேற்றினார். தலைமையாசிரியர் காமராஜ் வரவேற்றார். பரிசு வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

* நகர் காங்., சார்பில் நேரு பவனத்தில் நகர் தலைவர் சங்கர் கணேஷ் கொடியேற்றினார். தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகி சம்சுதீன், நகராட்சி கவுன்சிலர் புஷ்பம், நிர்வாகிகள் ரவி ராஜா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* பா.ஜ., சார்பில் விவசாய தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணதுரை கொடியேற்றினார். மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, மாவட்ட பொது செயலாளர் தங்கராசு, நகர் தலைவர் பிரேம் ராஜா, ஜெமினி சுரேஷ், மாவட்ட செயலாளர் மாதவ ராஜா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் பொன்விழா மைதானம் அருகே தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் கொடியேற்றினார். ராஜூக்கள் கல்லுாரி என்.சி.சி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்தார்.

* தர்மபுரம் காந்திஜி வாசகசாலையில் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் முதல்வர் வெங்கட்ராமன் கொடியேற்றினார். மேஜர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் சிவகுமார் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us