சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் --
சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் --
ADDED : ஆக 19, 2026 03:24 AM
ராஜபாளையம்: ''ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்துள்ளவர்கள் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என தெற்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இரவு ஓட்டலில் சாப்பிட்டு வந்த கல்லுாரி மாணவர்கள் உள்ளூர் இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உள்ளூர் இளைஞர்களுக்கு ஆதரவாக வந்த மது போதையில் இருந்த இளைஞர்கள், கல்லுாரி மாணவர்களை பஸ்சில் இறக்கி விரட்டி தாக்கினர். சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்குப் பதிந்த தெற்கு போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக பஸ் ஸ்டாண்டில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் புது பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு உடனடி தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் நடைமேடை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதுடன், முழு செயல்பாட்டில் வைத்திருந்து சந்தேக நபர்கள் கண்டறிய ஒத்துழைக்க வேண்டும். கேட்பாரற்ற வாகனங்கள், குற்றச் செயல்கள் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். என அறிவுறுத்தினார்.
