/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்
/
மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : அக் 26, 2024 04:42 AM
விருதுநகர்: விருதுநகரில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் நகராட்சி 30வது வார்டில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை துவக்கி அறிவுரை கையேட்டை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.
இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது 2024 அக்.. முதல் 2025 பிப்ரவரி வரை நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராம வாரியாகவும், நகர்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடை கணக்கெடுப்பு நடக்கும்.
கால்நடைகள் இருக்கிற, இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு, தனியார் பண்ணைகள், இறைச்சி, முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டு தலங்கள், கோசாலைகளில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்படும்.
இந்த பணியை செய்ய 207 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 46 மேற்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண் அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கிய தொழில், கல்வித் தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தியோ பிளஸ் ரோஜர், உதவி இயக்குநர் வெங்கடேஷ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.