நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் புத்தாக்க பயிற்சி நடந்தது.
மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை வகித்தார். வட்டார தளபதி அழகராஜா முன்னிலை வகித்தார். துணை வட்டார தளபதி அருள் செல்வி வரவேற்றார். ஆயுதப்படை ஏ.டி.எஸ்.பி., பழனிகுமார் கலந்து கொண்டார்.
கோவை மொகைதீன், பிரியா பங்கேற்று ஊர் காவல் படை வீரர்களுக்கு பணிகள், வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது சம்பந்தமான வழிமுறை பயிற்சிகள் வழங்கினர்.
மாவட்டத்தின் உட்கோட்டத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எஸ்.ஐ, தேவதாஸ், எழுத்தர் சிவராமன் செய்திருந்தனர். பிளட்டூன் கமாண்டர் வெங்கட பெருமாள் நன்றி கூறினார்.