நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க மேம்பாட்டு பயிற்சிகள் யுனிசெப் அறிவுசார் பங் களிப்புடன் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரையாற்றினர். பல்கலை சுய தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவன ஒருங்கிணைப்பாளர் டேனி வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்ட திட்ட மேலாளர் ராஜேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பேசினர். 240 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் பிலிப் மில்டன், சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர்.