UPDATED : நவ 24, 2026 07:19 PM
ADDED : நவ 24, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை குறித்து இன்ஸ்டாகிராமில் மத நல்லிணத்தை சீர்குலைக்கும் விதம் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகி விக்னேஷ் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தற்போது திருவாரூர் கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மதம் மற்றும் சமூக குழுக்கள் இடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்து பகையை ஏற்படுத்த துாண்டும் விதமாக பதிவிட்டுள்ளதாக, விருதுநகர் மாவட்ட சமூக ஊடக பிரிவு காவலர் மதிச்செல்வன் புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
