/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் துவக்கம்
/
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 02:56 AM
காரியாபட்டி: காரியாபட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கலெக்டர் சுகபுத்ரா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பயனாளிகளுக்கு பயிறு வகை தொகுப்பு, பழ செடி தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்திட, உழவர்களின் வருமானத்தை அதிகரித்திட, அரசு மூலம் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் எனும் புதிய திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
வேளாண் திட்டத்தில் பயன் பெற உழவர் செயலில் பதிவேற்றம் செய்பவர்களுக்கும், வலைதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாய குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இயந்திர மயமாக்குதல் உப இயக்கம் திட்டத்தின் கீழ் பவர் டில்லர் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் நாச்சியார் அம்மாள், செயற் பொறியாளர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.