/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொத்தமல்லி, நித்ய கல்யாணி பூ ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி
/
கொத்தமல்லி, நித்ய கல்யாணி பூ ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி
கொத்தமல்லி, நித்ய கல்யாணி பூ ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி
கொத்தமல்லி, நித்ய கல்யாணி பூ ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி
ADDED : ஜன 16, 2025 04:38 AM

விருதுநகர்: விருதுநகரில் கொத்தமல்லி, நித்ய கல்யாணி பூக்கள் ஒங்கிணைந்த முறை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர், சுற்று வட்டாரங்களில் மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது. இதில் மக்காச்சோளம் பயிரிட விரும்பாத விவசாயிகள் அதிகளவில் நித்ய கல்யாணி பூ சாகுபடி செய்துள்ளனர்.
6 மாத கால பயிரான மருத்துவக்குணம் வாய்ந்த நித்யகல்யாணி பூ நுரையீரல், புற்றுநோய் பாதிப்புகளுக்கு மருந்து தயாரிக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வறட்சி, பனியை தாங்கி வளரக்கூடிய நித்ய கல்யாணி சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு உழவு, களையெடுத்தல், உரம், கூலி உள்ளிட்டவற்றிற்கு ரூ. 18 ஆயிரம் வரை செலவாகும்.
ஒருமுறை பயிரிட்டால் மூன்று முறை பூக்களை அறுவடை செய்ய முடியும்.மார்கழியில் பயிரிட்டு மே வரை அறுவடை செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு மானாவாரி பயிரான கொத்தமல்லியை, நித்தியகல்யாணியுடன் ஊடுபயிராக ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி செய்துஉள்ளனர். பல ஆண்டுகளாக நித்ய கல்யாணி பூக்கள் விலையில் மாற்றமில்லாமல் ரூ. 35 க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு செலவழித்த தொகை மட்டுமே கிடைக்கிறது.
அதனால் இந்தாண்டு பேராலி, சுற்றியுள்ள பகுதிகளில் நித்ய கல்யாணியுடன் கொத்தமல்லியை விவசாயிகள் பயிரிட்டுஉள்ளனர். கொத்தமல்லி செடிகள் வளர்வதற்கு அதிக மழை தேவையில்லை என்பதாலும் கடும் குளிரிலும் வளரக்கூடியதாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர்.
விவசாயி சுந்தரமூர்த்தி கூறியதாவது:
நித்ய கல்யாணி பூக்களின் விலையில் பல ஆண்டுகளாக பெரிய மாற்றம் இல்லை. ஆனால் கொத்தமல்லிக்கு நல்ல விலை கிடைக்கிறது. இவ்விரண்டிற்கும் செலவாகும் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் நடப்பாண்டு விதை கொத்தமல்லி, நித்யகல்யாணி பூ ஒருங்கிணைந்த முறையில் பயிரிட்டுள்ளோம், என்றார்.