/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடு பணிகள் தீவிரம்: 1680 ஓட்டுச்சாவடிகளில் 188 பதட்டமானவை
/
தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடு பணிகள் தீவிரம்: 1680 ஓட்டுச்சாவடிகளில் 188 பதட்டமானவை
தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடு பணிகள் தீவிரம்: 1680 ஓட்டுச்சாவடிகளில் 188 பதட்டமானவை
தேர்தல் ஓட்டுப்பதிவு ஏற்பாடு பணிகள் தீவிரம்: 1680 ஓட்டுச்சாவடிகளில் 188 பதட்டமானவை
ADDED : ஏப் 18, 2024 04:49 AM
2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடந்தது. மார்ச் 28ல் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு மார்ச் 30ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் 7,33,217 ஆண்கள், 7,68,520 பெண்கள், 205 இதர வாக்களர்கள் என 15,48,825 வாக்களர்கள் உள்ளனர். மேலும் 1680 ஓட்டுச்சாவடிகளில் 188 பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் பதட்டமானவை என கண்டறியப்பட்ட 148 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்க 174 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு பணிக்காக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு 1460 ஓட்டுச்சாவடி அலுவலர்களும், திருமங்கலம் 1492 அலுவலர்களும், சாத்துார் 1380, சிவகாசி 1350, விருதுநகர் 1262, அருப்புக்கோட்டை 1243 என 8187 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4066 ஓட்டுபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 8000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லோக்சபா தொகுதியில் 156 மண்டல குழுக்களும், 54 தேர்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்களும், 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 6 வீடியோ கிராபர்களும், 6 வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 6 கணக்கு குழுக்களும் பணியில் உள்ளனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்க கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-2 34600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். சி விஜில் என்ற செயலியிலும் புகார்களை அளிக்கலாம்.
முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாது ஓட்டளித்து நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் கேட்டு கொண்டார்.

