ADDED : மார் 14, 2026 07:23 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி வேதியியல் ஆராய்ச்சி துறை சார்பில் அடுத்த தலைமுறைக்கான பல்துறை அறிவியல் அணுகுமுறைகள் என்ற தலைப்பில் இரு நாட்கள் சர்வதேச மாநாடு நடந்தது. கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். துறை தலைவர் முருக லட்சுமி வரவேற்றார்.
அமெரிக்கா மாசசூசெட்ஸ் ஆப் ஹெர்ஸ்ட் பல்கலை பேராசிரியர் தாயுமானவன், புனே சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை விஞ்ஞானி கிருஷ்ணமூர்த்தி, கலிபோர்னியா சிஎம்சி நிர்வாக இயக்குனர் சுந்தரவேல் ஆனந்தவேல், பேராசிரியர்கள் லலிதா, சிவக்குமார், உதவி பேராசிரியர் கணேஷ் சந்திர நந்தி, அறிவியல் கருவி மைய இயக்குனர் ராமன் பேசினர்.
ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்தனர். உதவி பேராசிரியர் விண்ணரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சைலஜா, பொற்கொடி செய்தனர்.
