ADDED : மார் 28, 2026 11:00 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திர பொறியியல் துறை சார்பில் துபாய் ஏ.எஸ்.டி.ஐ. அகாடமியுடன் இணைந்து பொருட்கள் உற்பத்தி, ஆட்டோமெஷினில் நிலையான கண்டுபிடிப்புகள் குறித்த இரு நாள் சர்வதேச மாநாடு நடந்தது.
இணை வேந்தர் அறிவழகி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் மாநாட்டை துவக்கி வைத்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். டீன் ஆறுமுக பிரபு வரவேற்றார்.
விழாவில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சம்பத், டாக்டர் சண்முகசுந்தரம் சக்திவேல், பேராசிரியர்கள் ஆதம்கான், சரவண சங்கர், அமைப்பு செயலாளர் கவிதா பேசினர். ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. துறை தலைவர் பத்ரிநாத் நன்றி கூறினார்.
