ADDED : ஜூலை 06, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரி , தமிழ்நாடு எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் மருந்தகம் , மருத்துவ த்துறையில் சமீபத்திய முன்னேற்றம் என்ற தலைப்பில் சர்வதேச தொடர் கல்வி மாநாடு நடந்தது.
தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.
மனமா பக்ரைன் ஜூபைர் தொழில்நுட்ப வளைகுடா கழக மூத்த பயன்பாட்டு நிபுணர் சாகுல் ஹமீத் முஹமது மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஓசூர் ஏ.வி.பி. நவால் லேப் இணை துணைத் தலைவர் பாலமுருகன் சேது ரத்தினம், சென்னை நியாமா நிறுவன இயக்குனர் கருணாகரன் ஆகியோர் தற்போதைய மருந்து துறை வளர்ச்சி பற்றி பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.