
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று டிச.21 ஐ சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. உடல் மற்றும் மன நலனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனுசரிக்கும் வகையில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் மாணவிகள் , சிவகாசி வாழும் கலை அமைப்பு சார்பில் சர்வதேச தியான தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஆசிரியைகள் யோக ஷிவானி,பானுரேகா, செண்பக சாந்தி தியான பயிற்சி கற்பித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி செய்தார்.