ADDED : டிச 11, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை தமிழ் மன்றம், அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் திசை காட்டும் பாரதி 24 என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேஷராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ் மன்ற தலைவர் சங்கீதா வரவேற்றார்.
கருத்தரங்கில் எழுத்தாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ராமானுஜம், செய்தி வாசிப்பாளர் காயத்ரி, முன்னாள் மக்கள் தொடர்பு இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ, எழுத்தாளர் ராஜமாணிக்கம், ஆசிரியர் ராஜகுரு, பேராசிரியர்கள் பூங்கோதை, கமலா உட்பட பல எழுத்தாளர்கள் பேசினர். கவிஞர் ஆரோக்கிய ராசு நன்றி கூறினார்.