ADDED : மார் 02, 2026 05:57 AM
விருதுநகர்: விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் இளங்கலை தமிழ்த்துறை, மதுரை தமிழ் சங்க வெளியீடான செந்தமிழ் இதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்த்துறைத் தலைவர் விந்திய கவுரி வரவேற்றார். மதுரை செந்தமிழ்க் கல்லுாரி விரிவுரையாளர் அதிவீரபாண்டியன், கல்லுாரி தலைவர் பழனிச்சாமி, செயலாளர் மதன், பொருளாளர் சந்திர சேகரன், முதல்வர் சிந்தனா வாழ்த்தினர்.
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வாழ்வியல் நுால் வெளியீட்டு விழாவின் முதல் தொகுதியை தலைவர் வெளியிட உதவி பேராசிரியர் நேருஜி பெற்றுக் கொண்டார்.
மலேசியா தெங்கு அம்புவான் அப்சான் கல்வி யியல் கல்லுாரி மொழிகள் துறை தலைவர் துரைமுத்து சுப்பிரமணியம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி உதவி பேராசரியர் கலாவதி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி உதவி பேராசிரயர் அருள்மொழி பேசினர்.
