UPDATED : மே 15, 2026 05:56 PM
ADDED : மே 15, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர்:கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் இந்திய மருந்தியல் சங்கம் சார்பில் சர்வதேச கருத்தரங்கு மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நடந்தது.
தாளாளர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சசி ஆனந்த், இயக்குனர் அர்ஜுன் கலசலிங்கம் வாழ்த்தினர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.
சென்னை சி.ஆர்.சி.குழும இயக்குனர் யுவராஜ், பேராசிரியர் ஹரி பாஸ்கர், குஜராத் பி.டி.ஆர்.மருந்தக விஞ்ஞானி ராகுல், பாஸ்டர் இந்தியா நிறுவன
அறிவியல் உதவியாளர் சிந்து பேசினர்.
பின்னர் பி.டி.ஆர்.மருந்தக நிறுவனத்திற்கும், கலசலிங்கம் பார்மசி கல்லூரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பேராசிரியர் ரோகிணி நன்றி கூறினார்.
