நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
யோகா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிலதிபர் சிவனேஷ்குமார் பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கி, யோகா பயிற்சிகளில் பங்கேற்று முழுமையான ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றும், நமது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்த யோகா துணை புரியும் என்றும் கூறினார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற, பங்கேற்ற மாணவர்களை கல்லுாரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீமுருகன், இணை செயலாளர் முருகன், கல்லுாரி முதல்வர் செந்தில் பாராட்டினர்.