/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் தபால் ஆபீசில் இன்டர் நெட் பிரச்னை
/
சாத்துார் தபால் ஆபீசில் இன்டர் நெட் பிரச்னை
ADDED : டிச 18, 2025 05:48 AM
சாத்துார்: சாத்தூர் போஸ்ட் ஆபீஸில் இன்டர் நெட் பிரச்சனையால் ஸ்பீடு போஸ்ட் அனுப்ப முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
சாத்துார் துணை தபால் ஆபீசில் நேற்று காலை 9:30 மணிக்கு வரிசையில் காத்திருந்த பலர் ஸ்பீடு போஸ்ட் அனுப்புவதற்காக நின்று கொண்டிருந்தனர்.
ஸ்பீடு போஸ்ட் கான பாரத்தை நிரப்பி காத்திருந்த பலர் அதற்கான கவுண்டரில் நின்று கொண்டிருந்த போதும் இன்டர் நெட் பிரச்சனையால் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
நேற்று மாலை வரை இது சீரமைக்கப்படவில்லை பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சாத்துார் தபால் ஆபீஸில் ஸ்பீடு போஸ்ட் பிரிவில் பணிபுரிந்து வரும் அலுவலர் சாந்தி கூறியதாவது:
காலையிலிருந்து நெட் ப்ராப்ளத்தால் ஸ்பீட் போஸ்ட் பதிவு தபால்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தவர்களிடம் தபால்களை பெற்று நெட்வொர்க் கிடைக்கும் போது பதிவு செய்து தந்து வருகிறேன். யாரையும் திருப்பி அனுப்பவில்லை. வழக்கம்போல் பணிகள் நடந்து வருகிறது. என்றார்.
தபால்களை அனுப்புவதற்கு தனியார் நிறுவனங்கள் பல வந்த போதும் இன்றும் மக்கள் போஸ்ட் ஆபீஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
எனவே போஸ்ட் ஆபீஸ்சுக்கு வருகை தரும் மக்களுக்கு தடையின்றி சேவை செய்ய நெட்வொர்க் வசதியை மேம்படுத்திட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

