/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விரைவில் பிளவக்கல் பூங்கா பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
/
விரைவில் பிளவக்கல் பூங்கா பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
விரைவில் பிளவக்கல் பூங்கா பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
விரைவில் பிளவக்கல் பூங்கா பணிகள் : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
ADDED : அக் 22, 2025 12:58 AM
வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீர் வரத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். தற்போது அணையில் 80 சதவீத கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக 20 சதவீத தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுவரை இந்த பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இந்த அணையின் உள்ள பூங்கா மேம்பாட்டிற்காக முதல்வர் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் பணிகள் துவங்கும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்ல போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அனைத்து பணிகளும் முடிந்த பிறகு டிசம்பர் 15 முதல் தகுதி உள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும்.
முதல்வரே நேரடியாக மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று தமிழகம் முழுவதும் மழை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
இதை தொடர்ந்து வெம்பக்கோட்டை அணையையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் சுகபுத்ரா, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜான்சி அனிதா உடன் இருந்தனர்.